சுடச்சுட

    

    பாகிஸ்தான் கடற்படையினரை உயிருடன் மீட்ட இந்திய மீனவர்கள்

    By DIN  |   Published on : 12th April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரேபிய கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், நடுக்கடலில் தண்ணீரில் மூழ்கிய பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 2 பேரை இந்திய மீனவர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.
    இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்து தங்கள் நாட்டுக்கு பாகிஸ்தான் கடற்படையினர் அழைத்துச் சென்றபோது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
    குஜராத் மாநில எல்லைக்குட்பட்ட அரேபிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 60 பேர் 10 படகுகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர், மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
    இதையடுத்து, இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கராச்சிக்கு பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கொண்டு சென்றனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுடன் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையின் சிறிய படகு திடீரென மோதி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த 6 அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கினர். அப்போது தண்ணீரில் குதித்து, பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 2 பேரை இந்திய மீனவர்கள் மீட்டனர். எஞ்சிய 4 பேரின் நிலை தெரியாததால், மீனவர்கள், படகுகளுடன் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கராச்சிக்கு சென்றுவிட்டனர்.
    இதுகுறித்த தகவலின்பேரில், குஜராத் கடற்பகுதிக்கு இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் "அறிஞ்செய்' கப்பல் விரைந்து சென்றது. அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் 3 பேரின் சடலங்களை கண்டுபிடித்து, அவற்றை இந்திய கடலோர பாதுகாப்புப் படையிடம் மீனவர்கள் அளித்தனர். இந்த சடலங்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரிடம் இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஒப்படைத்தது.
    அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சம்பவங்களால், இந்திய மீனவர்கள் 60 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை உடனடியாக விடுவித்துவிட்டது. அவர்களும் தங்களது படகுகளுடன் குஜராத்துக்கு திரும்பிவிட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 2 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இதுகுறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்ததால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    முன்னதாக, கடந்த ஓரே மாதத்தில் இந்திய மீனவர்கள் 231 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai