சுடச்சுட

  

  பிரதமரின் கல்வித் தகுதி குறித்து அவதூறு: கேஜரிவாலுக்கு பிடியாணை

  By DIN  |   Published on : 12th April 2017 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aravind_kejerwal

  பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடியாணையை அஸ்ஸாம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
  பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து அரவிந்த் கேஜரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சுட்டுரையில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், "மோடி பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர்; அவரது மேற்படிப்பு தொடர்பான பட்டங்கள் அனைத்தும் போலியானவை' என்று கேஜரிவால் குறிப்பிட்டிருந்தார்.
  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 30-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு உத்தரவிட்டது.
  இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக கேஜரிவால் தரப்பில் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
  ஆனால், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 7-ஆம் தேதியும் கேஜரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி நபா குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது, தில்லி மாநகராட்சித் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தம்மால் அதுவரை நேரில் ஆஜராக முடியாது என்று கேஜரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  இதனை ஏற்க மறுத்த நீதிபதி தபா குமார் தேகா பரூவா, அரவிந்த் கேஜரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் பிணையில் வெளிவரக்கூடிய பிடியாணையை பிறப்பித்தார். மேலும், வரும் மே 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai