சுடச்சுட

  

  பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக புரட்சித் தலைவி அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் ஆகியோர் தனித் தனியாக செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
  சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத் குமார், நடிகை ராதிகா ஆகியோருக்குச் சொந்தமான ராடான் டிவி நிறுவனம் ஆகியவற்றில் வருமான வரித் துறை தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், அதிமுகவின் இரு தரப்பு அணியைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமரைச் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதையொட்டி தில்லிக்கு மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் செவ்வாய்க்கிழமை வந்தனர். இதையடுத்து, காலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்துக்குத் சென்று மைத்ரேயன் சந்தித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. தற்செயலாக அவரைச் சந்தித்து நட்பு அடிப்படையிலும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பேசினேன்' என்றார். தம்பிதுரை தரப்பிலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai