சுடச்சுட

  

  பிரதமரை நேரில் அழைத்து விசாரிக்க பிஏசி-க்கு அதிகாரம் உண்டு

  By DIN  |   Published on : 12th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thomas

  பிரதமர், மத்திய அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவுக்கு (பிஏசி) விதிகளின்படி அதிகாரம் உண்டு என்று பிஏசி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி. தாமஸ் மீண்டும் கூறியுள்ளார்.
  தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: பிஏசி என்பது அனைத்து நாடாளுமன்றக் குழுக்களுக்கும் தாய் போன்றது. எனவே, அதனை வலுவாக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
  பிரதமர், மத்திய அமைச்சர்கள் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட பிஏசிக்கு முழு அதிகாரம் உள்ளது. இதற்காக மக்களவைத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. பிஏசி-யில் இதற்கான விதிகள் உள்ளன. முன்பு, முரளி மனோகர் ஜோஷி பிஏசி தலைவராக இருந்தபோது, 2ஜி முறைகேடு விவகாரத்தில் பிஏசி முன்னிலையில் ஆஜராகத் தயாராக இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். அதற்காக இப்போது, பிரதமர் மோடிக்கு நாங்கள் சம்மன் அனுப்புவோம் என்று கூறவில்லை என்றார்.
  அண்மையில், கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை பிஏசி ஆய்வு செய்து வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமரை நேரில் ஆஜராக உத்தரவிடவும் பிஏசி-க்கு அதிகாரம் உண்டு' என்றார்.
  ஆனால், அதன் பிறகு பிஏசி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமரை நேரில் அழைத்து விசாரிக்க பிஏசி-க்கு உரிமையில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.
  இந்த விவகாரத்தில் தாமஸ் மீது குற்றம்சாட்டிய பாஜக எம்.பி.யும், பிஏசி உறுப்பினருமான நிதீஷ்காந்த் துபே, பிரதமரின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் தாமஸ் நடந்து கொண்டதாகக் கூறி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai