சுடச்சுட

  

  முன்பதிவு ரயில் பெட்டிகளில் பிறர் பயணிப்பதை தடுக்க வேண்டும்

  By DIN  |   Published on : 12th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்களும் பயணித்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு, வடக்கு ரயில்வே ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க தில்லி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

  "பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் வேறு பயணிகள் பயணிப்பதை தடுக்க வேண்டியது ரயில்வே அதிகாரிகளின் கடமை. அதை ரயில்வே செய்யத் தவறியது சேவையின் குறைபாடாகும்' என்றும் தில்லி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் நீதிபதி வீனா பீர்பால் தெரிவித்தார்.
  தில்லியைச் சேர்ந்த தேவ் காந்த் 2009ஆம் ஆண்டு மோரி விரைவு ரயிலில் அமிருதசரஸில் இருந்து தில்லிக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார். அவருடைய பெட்டியில் சாதாரண பயணிகளும் பெருமளவில் உள்ளே நுழைந்து இருக்கை, தரையில் அமர்ந்துள்ளனர். டிக்கெட் பரிசோதகரும், "ரயில் முழுவதும் கூட்டமாக நுழைந்தவர்களை வெளியேற்ற முடியாது' என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் தானும் தனது மனைவியும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியதாக தேவ் காந்த் தில்லி நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தேவ் காந்த் பயணம் செய்த ரயில் பெட்டியில் கூட்டம் ஏறவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் சார்பில் வாதிடப்பட்டது.
  ஆனால், மோரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த பிற நபர்களை டிக்கெட் பரிசோதகர் வெளியேற்றிவிட்டார் என்று மற்றொரு ரயில்வே அதிகாரி எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
  இதன் அடிப்படையில், தேவ் காந்தின் குற்றச்சாட்டை உறுதி செய்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வடக்கு ரயில்வேக்கு உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai