சுடச்சுட

    

    ஆஸாராம் வழக்கு: சாட்சியங்களின் வாக்குமூலங்களை விரைந்து பெற உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 13th April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    சாமியார் ஆஸாராம் தொடர்பான பலாத்கார வழக்கின் சாட்சியங்களிடமிருந்து விரைந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சூரத் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    தங்களை ஆசிரமத்தில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆஸாராம் மீது சூரத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013-ஆம் ஆண்டு புகார் அளித்தனர். இதன்பேரில், ஆஸாராமை போலீஸார் அதே ஆண்டு கைது செய்தனர்.
    இந்த வழக்கு தொடர்பான விசாரணை, சூரத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சாமியார் ஆஸாராம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
    இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சாமியார் ஆஸாராமின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை விரைந்து முடிக்காமல் வேண்டுமென்றே சூரத் நீதிமன்றம் இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
    இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்கே. கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு துணைத் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, ஆஸாராம் தொடர்பான வழக்கை ஆறு மாதங்களுக்குள் சூரத் நீதிமன்றம் முடித்துவிடும் என்று தெரிவித்தார்.
    இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
    ஆஸாராம் தொடர்பான பலாத்கார வழக்கில் சாட்சியங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2 சாட்சியங்கள் உயிரிழந்துவிட்டனர். எனவே, இந்த வழக்கில் மீதமுள்ள 49 சாட்சியங்களின் வாக்குமூலங்களை விரைந்து பெற சூரத் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai