சுடச்சுட

  

  புகைப்படங்களையும், விடியோக்களையும் பகிர்ந்து கொள்ள உதவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியில் (ஆப்) அதிகமானோர் பின்தொடரும் சர்வதேச தலைவராக பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார்.
  அவரை 69 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட மோடிக்கு பின்னால், இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். அவரை 63 லட்சம் பேர் வரை பின் தொடர்கின்றனர்.
  இப்பட்டியலில் போப் பிரான்சிஸுக்கு 3-ஆவது இடம் கிடைத்துள்ளது. அவரை 37 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையை இன்ஸ்டாகிராமில் 34 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
  இன்ஸ்டாகிராமில் மோடி இதுவரை 101 பதிவுகளிட்டுள்ளார். அவரது பதிவுகளுக்கு சராசரியாக சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் 'லைக்', 'கமாண்ட்' குவிகிறது.
  இன்ஸ்டாகிராமில் 38 நாடுகளின் தலைவர்கள், 28 வெளியுறவு அமைச்சர்கள், 73 மாகாணத் தலைவர்கள் தங்கள் புகைப்படங்கள், விடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் உலகத் தலைவர்கள் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்
  தகவல்கள் தெரியவந்துள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai