சுடச்சுட

  

  உ.பி.யில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆதித்யநாத் அதிரடி

  By DIN  |   Published on : 13th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiadityanath

  உத்தரப் பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டார். அங்கு பாஜக அரசு அமைந்த பிறகு, தற்போது முதல்முறையாக உயரதிகாரிகள் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளனர்.
  அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த முதன்மைச் செயலர் (தகவல் துறை) நவ்னீத் ஷெகல், தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் ஆவார்.
  மத விவகாரங்கள், சுற்றுலா ஆகிய துறைகளின் முதன்மைச் செயலர் பொறுப்பையும் வகித்து வந்த நவ்னீத், உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சி ஆணையம், மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தார்.
  தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள அவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தும், ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai