சுடச்சுட

    

    கர்நாடக இடைத்தேர்தல்: நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி 

    By மைசூரு  |   Published on : 13th April 2017 02:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தில் நஞ்சன்கூடு, சாமராஜ்நகர் மாவட்டத்தில் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விரு தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.கேசவமூர்த்தி 21,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக என்.கேசவமூர்த்தி, பாஜக வேட்பாளராக வி. சீனிவாஸ் பிரசாத், கருநாடு கட்சி வேட்பாளராக எம்.பிரதீப்குமார், சுயேச்சை வேட்பாளர்களாக டி.ஈஸ்வர், ஜி.ஆனந்த், குருலிங்கையா, டி.கே.துளசப்பா, சுப்பையா, பி.எஸ்.மகாதேவசுவாமி, எச்.பி.சேஷண்ணா உள்பட 12 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai