சுடச்சுட

  

  கர்நாடக மாநில இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி

  By மைசூரு  |   Published on : 13th April 2017 02:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநில இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

  கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தில் நஞ்சன்கூடு, சாமராஜ்நகர் மாவட்டத்தில் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விரு தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

  நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.கேசவமூர்த்தி 21,334 வாக்குகள் வித்தியாசத்திலும், குண்டல்பேட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவ பிரசாத் 10,877 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

  இடைத் தேர்தல் முடிவுகள் முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai