சுடச்சுட

  

  குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சிவசேனை வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  uttave

  இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
  இதுகுறித்து மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  நமது உணர்வுகளை சொல்வதாலோ அல்லது பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுப்பதாலோ எதுவும் தற்போது நேர்ந்து விடாது. பாகிஸ்தானுக்கு நிரந்தரமாக படிப்பினையை புகட்டுவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. குல்பூஷண் ஜாதவை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்.
  இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள், நடிகர்களுக்கு சிவசேனை கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும்போது எங்கள் கட்சி மீது விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிப்பது உள்ளிட்ட சம்பவங்களின்போது மட்டும், பிறருக்கு தேசப்பற்று அதிகரிக்கிறது (பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்ததை குறிப்பிட்டார்) என்றார் உத்தவ் தாக்கரே.
  ராம் ஜேத்மலானி கோரிக்கை:

  இதனிடையே, தில்லியில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி பிடிஐ செய்தியாளரிடம் பேசியபோது, குல்பூஷண் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நகலை இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்றார். எந்தக் காரணத்தின் அடிப்படையில், குல்பூஷண் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, அதற்கு இந்தியா உரிய வகையில் எதிர்ப்பு தெரிவிக்க மேற்கண்ட நகல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai