சுடச்சுட

  
  seetha

  சீதை பிறந்த இடம் தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
  மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்விநேரத்தின்போது, 'சீதை பிறந்த இடமான பிகார் மாநிலம், சீதாமர்ஹி பகுதியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?' என்று பாஜக உறுப்பினர் பிரபாத் ஜா கேள்வியெழுப்பினார்.
  இதற்கு, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ராமாயணம் தொடர்புடைய இடங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தில் சீதாமர்ஹியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
  மேலும், சீதையின் பிறந்த இடம் என்பது நம்பிக்கை தொடர்புடையது என்றும், சீதாமர்ஹியில் இதுவரை தொல்லியல் துறை ஆய்வு எதுவும் நடைபெறவில்லை என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டிருந்தது.
  இதையடுத்து, அமைச்சரின் பதிலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், சமாஜவாதி உறுப்பினர் ஜெயாபச்சன், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் அனில் குமார் சஹானி, காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  திக்விஜய் சிங் கூறுகையில், 'சீதாமர்ஹியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே, அங்குதான் சீதை பிறந்தார் என்பதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை மத்திய அரசே மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறது' என்றார்.
  இதைத் தொடர்ந்து, தனது பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், சீதை பிறந்த இடம் குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை என்றும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கமளித்தார்.
  ராமரை அவமதிக்க வேண்டாம்: இதனிடையே, மேங்கு வங்கத்தில் ராம நவமியையொட்டி பாஜக சார்பில் அண்மையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் பங்கேற்ற விவகாரத்தை, மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் எழுப்பினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கடவுள் ராமரை அவமதிக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai