சுடச்சுட

  

  ஜனநாயகத்தின் அர்த்தம்கூட பிரதமருக்குத் தெரியாது: ஒபிசி சட்டத் திருத்த விவகாரத்தில் காங்கிரஸ் பதிலடி

  By DIN  |   Published on : 13th April 2017 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜனநாயகம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று கூட பிரதமர் மோடிக்கு தெரியாது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் மாநிலங்கள் புதிதாக எந்த ஜாதியையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இயலாத வகையில் ஓபிசி சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என்பதே அதில் பிரதான அம்சமாக இருந்தது.
  அந்தச் சட்டத் திருத்தமானது மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அந்தச் சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்துவதாகக் குற்றம்சாட்டினார். இந்நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  ஓபிசி நல மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது எதிர்க்கட்சியினரின் கருத்தாக இருந்தது. அதனைத் தெரிவிப்பது ஜனநாயக உரிமை. அதைப் புரிந்துகொள்ளாமல் பிரதமர் பேசி வருகிறார். ஜனநாயகம் என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம்கூட அவருக்குத் தெரியாது என்றார் குலாம் நபி ஆசாத்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai