சுடச்சுட

  

  தாணே: ஏப்.21 இல் சாவர்க்கர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் அமித் ஷா

  By DIN  |   Published on : 13th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் வரும் 21-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறும் 29-ஆவது சாவர்க்கர் மாநாட்டை, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கிவைக்கிறார்.
  தாணேயில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டை, ஸ்வதந்திர வீர சாவர்க்கர் மண்டல், சாவர்க்கர் தர்ஷன் பிரதிஷ்டான், ஸ்வதந்திரா வி.டி. சாவர்க்கர் பிரதிஷ்டான் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
  இதுதொடர்பாக சாவர்க்கர் தர்ஷன் பிரதிஷ்டான் அமைப்பின் செயலர் ரவீந்திர சாதே கூறுகையில், 'இந்த 3 நாள் மாநாட்டில், வீர சாவர்க்கரின் கருத்துகள் தொடர்பான கண்காட்சி, கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். புகழ்பெற்ற எழுத்தாளரான ரமேஷ் பதங்கே, மாநாட்டுக்கு தலைமை வகிக்க உள்ளார். சாவர்க்கரின் வாழ்க்கை, அவர் ஆற்றிய பணிகள் குறித்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் உரையாற்ற உள்ளனர்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai