சுடச்சுட

  

  மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் 73-ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
  சுமித்ரா மகாஜன் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். அகவை 73-ஐக் கடந்துள்ள அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
  இதனிடையே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக மக்களவைத் தலைவர் இருக்கைக்குச் சென்ற பிரதமர் மோடி, சுமித்ரா மகாஜனுக்கு பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
  மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார்.
  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு சுமித்ரா மகாஜனுக்கு மக்களவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai