சுடச்சுட

  

  மாநிலங்களவை தலைவரின் உத்தரவுகளை அரசு கடைப்பிடிப்பதில்லை

  By DIN  |   Published on : 13th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  digvijaysingh

  மாநிலங்களவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
  கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றிய போதிலும், இரண்டாம் இடத்தில் இருந்த பாஜகவை ஆட்சியமைக்க கோவா ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் சார்பில் தனிநபர் தீர்மானம் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தைப் பரிசீலித்த மாநிலங்களவைத் தலைவர், இந்த தீர்மானத்துக்கு அப்போதே ஒப்புதல் வழங்கினார். எனினும், இந்த தீர்மானம் தொடர்பாக மத்திய அரசு விவாதம் நடத்தவில்லை.
  இந்நிலையில், இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் திக்விஜய் சிங் புதன்கிழமை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
  எனது தீர்மானம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மாநிலங்களவையின் அனைத்து அலுவல்களிலும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை இதுதொடர்பான விவாதம் நடைபெறவில்லை. எனது தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மாநிலங்களவைத் தலைவர் அனுமதியளித்த போதிலும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. உங்களின் (மாநிலங்களைத் தலைவர்) உத்தரவுகளை மீறி அரசு செயல்படுகிறது. இது துரதிருஷ்டவசமானது என திக்விஜய் சிங் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai