சுடச்சுட

  

  பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.2240 கோடி நிதியை முறைகேடாக பெற்ற 4 பேரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
  இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
  சூர்ய விநாயக் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்திவரும் அதன் இயக்குநர்கள் சஞ்சய் ஜெயின், ராஜீவ் ஜெயின், ரோஹித் சௌதரி, சஞ்சீவ் அகர்வால் ஆகிய 4 பேரும் பல்வேறு வங்கிகளிடம் இருந்து முறைகேடாக ரூ.2240 கடன் பெற்றதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது.
  அந்தப் புகாரில், 100-க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி தங்கள் வங்கியிடம் இருந்து அந்த நால்வரும் கடன் பெற்றதாகவும், வெளிநாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி நிதிப் பரிமாற்றம் செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி குறிப்பிட்டிருந்தது.
  அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai