சுடச்சுட

    

    வரிவிதிப்பில் சீர்திருத்தம்: மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

    By DIN  |   Published on : 13th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரிவதிப்பில் சிறப்பான முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் பாராட்டினார்.
    அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள டர்ன்புல், மும்பை நகருக்கு புதன்கிழமை சென்றார்.
    அங்கு தொழிலதிபர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
    பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பானதாக உள்ளன. குறிப்பாக, வரிவிதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
    தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நாட்டில் சுமார் 40 கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
    இதன்மூலம், உலகின் பல்வேறு இடங்களில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடிகிறது. மனித வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும் என்றார் மால்கம் டர்ன்புல்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai