சுடச்சுட

  

  வருங்கால வைப்பு நிதி: ஆதாரை சமர்ப்பிக்க ஏப்ரல் 30-வரை அவகாசம்

  By DIN  |   Published on : 13th April 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதார் எண்ணை அளிக்க வேண்டியதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நீட்டித்துள்ளது.
  முன்னதாக, மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
  நாடு முழுவதும் சுமார் 4 கோடிக்கு மேற்பட்டோருக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓய்வூதியம் பெற்று வரும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்னணு முறையில் தங்கள் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  வாழ்வுச் சான்றிதழை மின்னணு முறையில் அளிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் அதற்கான உரிய காரணத்தை தெரிவித்து பழைய முறையில் காகிதத்தைப் பயன்படுத்தி வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  சான்றிதழை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அளிக்காதவர்களுக்கு மே மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை சமர்ப்பிக்க ஏற்கெனவே சில முறை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai