சுடச்சுட

  
  VijayMallya

  அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை தில்லி நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளது.
  பொதுத் துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி பிறப்பித்தது.
  அந்த ஆணையை இன்னமும் செயல்படுத்த முடியவில்லை என்றும் அதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை சமர்ப்பித்தது.
  அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுமித் தாஸ், விஜய் மல்லையாவுக்கு எதிராக குறிப்பிட்ட காலத்துக்குள் காலாவதி ஆகாத பிடியாணையை புதிதாக பிறப்பித்தார்.
  மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai