சுடச்சுட

    

    எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு: இந்தியா-நேபாளம் ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 14th April 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தையொட்டிய எல்லைப் பகுதி பிரச்னையை கூட்டு ஆய்வு மூலம் தீர்த்துக் கொள்ள இந்தியாவும், நேபாளமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
    இந்தியாவும், நேபாளமும் 1,751 கி.மீ. நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
    இதில் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ளன.
    சுமார் 599.3 கி.மீ. நீளம் கொண்ட இந்த எல்லைப் பகுதி தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்னை உள்ளது.
    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக லக்கிம்பூர் கேரி மாவட்ட அதிகாரிகளும், நேபாளத்தின் காஞ்சன்பூர் பகுதி அதிகாரிகளும் அந்நாட்டின் மகேந்திரநகரில் புதன்கிழமை சந்தித்தனர்.
    அப்போது, எல்லைப் பகுதிகள் தொடர்பான பிரச்னையை கூட்டு ஆய்வு மூலம் தீர்த்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
    அதன்படி, உத்தரப் பிரதேசத்தின் கேரி மாவட்டத்தையொட்டி நேபாளத்தில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    வரும் ஜூன் மாதத்துக்குள் இந்த ஆய்வு நிறைவடையும் என்று கேரி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்தீப் தெரிவித்தார்.
    ஜிபிஎஸ் சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் எல்லைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின், காணாமல் போன மற்றும் சேதமடைந்த எல்லைத் தூண்களின் கட்டுமானம்-பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai