சுடச்சுட

    

    ஏழை முஸ்லிம் பெண்களுக்கு இலவச திருமணம்: உ.பி. அரசு திட்டம்

    By DIN  |   Published on : 14th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ஒரே இடத்தில் அரசு செலவில் திருமணம் செய்து வைக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது.
    இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் மோஸின் ராஸா கூறியதாவது: முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கு ஒரே இடத்தில் அரசு செலவில் திருமணம் செய்து வைக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்தார்.
    இந்த புதிய திட்டம் 100 நாள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 20 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைப்பதுடன் தலா ஒருவருக்கு ரூ.20ஆயிரம் ரொக்கமும் அளிக்கப்படும் என்று மோஸின் ராஸா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai