சுடச்சுட

  

  ஐபிஎல் போட்டியின்போது குவியும் குப்பைகள்: டிபிசிசி கண்காணிக்க என்ஜிடி உத்தரவு

  By புதுதில்லி  |   Published on : 14th April 2018 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kotla_delhiGround1

   

  தில்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது மைதானத்தில் குவியும் குப்பைகள் குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) கண்காணிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

  ஐபிஎல் போட்டிகளின்போது ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் குப்பைகள் குவிவது தொடர்பாக காஜியாபாதைச் சேர்ந்த அஜய் மெஹ்ரா என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: ஐபிஎல் போட்டியின்போது, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஒவ்வொரு ஆட்டத்தையும் காண அந்த மைதானத்தில் சுமார் 40,000 ரசிகர்கள் கூடுகின்றனர்.

  அங்கு அவர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருகளின் மிச்சம், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பாக்கெட்டுகள் போன்றவற்றால் குப்பைகள் உருவாகிறது. மட்கும் குப்பை, மட்காத குப்பை என மொத்தமாக சுமார் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அங்கு உருவாகிறது.

  கடந்த ஐபிஎல் போட்டியின்போது இதேபோல உருவான குப்பைகளை பிரித்து, வடக்கு தில்லி மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் அமைப்பிடம் கொடுத்ததற்கான எந்தவொரு சான்றும் வழங்கப்படவில்லை.

  மேலும், குப்பைகளை பிரித்துப் போடுவதற்காக மைதானத்தில் தனித் தனியே குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்படவில்லை. இவற்றின் காரணமாக நகரத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

  எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016-இன் படி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களின்போது உருவாகும் குப்பைகளை முறையாக கையாளுவதற்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

  இந்த மனு மீதான விசாரணையை தீர்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை மேற்கொண்டது.

  பின்னர், அந்த அமர்வு கூறியதாவது: ஐபிஎல் போட்டியின்போது அந்த மைதானத்தில் எந்த மாதிரியான குப்பைகள் உருவாகின்றன? அவற்றின் மூலாதாரம் எது? என்பது தொடர்பான தகவல்கள் மனுவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க இயலாது. எனினும், ஐபிஎல் போட்டியில் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டங்களின்போது உருவாகும் குப்பைகள் குறித்து கண்காணிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பாய அமர்வு கூறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai