சுடச்சுட

  

  குஜராத் கலவரம்: சிறப்பு விசாரணைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து ஆர்.கே. ராகவன் விடுவிப்பு

  By DIN  |   Published on : 14th April 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ஆர்.கே. ராகவனை, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 25 பெண்கள், 25 குழந்தைகள் உள்பட 59 பேர் உயிரிழந்ந்ததைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்து. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
  குல்பர்க் குடியிருப்பு, ஓடே, சர்தார்புரா, நரோதா காம், நரோதா பாட்யா, மச்சிபித், தர்சாலி, பண்டார்வடா, ராகவபுரா ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் அதிக அளவில் பெண்கள், குழந்தைகள் உளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  இந்த 9 இடங்களிலும் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரிப்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதின்றம் நியமித்து.
  இந்த நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருக்கும் ஆர்.கே. ராகவனை, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு மூத்த வழக்கரைஞரும், இந்த வழக்கில் நீதிமன்ற ஆலோசகருமான ஹரீஷ் சால்வே தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூட், எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.
  மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவராக ஆர்.கே. ராகவன் ஆற்றிய பணிகளை நீதிபதிகள் பாராட்டினர்.
  எஸ்.கே. ராகவனின் பொறுப்புகளை, சிறப்பு விசாரணைக் குழுவின் மற்றோர் உறுப்பினர் ஏ.கே. மல்ஹோத்ரா கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai