சுடச்சுட

  

  ஜக்கி வாசுதேவ், ஜேசுதாஸ், மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்

  By DIN  |   Published on : 14th April 2017 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Karmakar

  பிரபல ஆன்மிகவாதியும் ஈஷா யோக மைய நிறுவனருமான ஜக்கி வாசுதேவ், திரைப்பட பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, "பாரா ஒலிம்பிக்' தடகள வீரர் மாரியப்பன், பத்திரிகையாளர் சோ ராமசாமி (மரணத்துக்கு பிந்தைய விருது) உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

  கலை, சமூக சேவை, மருத்துவம், பொது வாழ்வு, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சாதனை படைத்து வரும் குடிமக்களைக் கௌரவிக்கும் வகையில், 2017-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டது.
  இதில் முதல் கட்டமாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விண்வெளி விஞ்ஞானி யு.ஆர்.ராவ் உள்பட 37 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.


  இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
  இதில் யோக குரு ஜக்கி வாசுதேவ், திரைப்பட பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா (மரணத்துக்கு பிந்தைய விருது) ஆகியோருக்கு பத்ம விபூஷண்; சம்ஸ்கிருத இலக்கியவாதி பேராசிரியர் தேவிபிரசாத் துவிவேதி, பத்திரிகையாளர் சோ ராமசாமி (மரணத்துக்கு பிந்தைய விருது) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. சோ ராமசாமிக்குரிய விருதை அவரது மனைவி சௌந்தரா ராமசாமியிடம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
  ரியோ "பாரா ஒலிம்பிக்' (மாற்றுத் திறனானிகளுக்கான சர்வதேச போட்டி) உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் டி.மாரியப்பன், மிருதங்க இசைக் கலைஞர் டி.கே.மூர்த்தி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்பட 36 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.


  இந்நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai