சுடச்சுட

  

  சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்குக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
  ஜாகிர் நாயக்குக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தது. ஜாகீர் நாயக்குக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எந்தவொரு பதிலும் அனுப்பப்படாததால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்குரைஞர் வாதம் முன்வைத்தார்.
  அப்போது, ஜாகீர் நாயக்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட நபராக அவரது பெயர் சேர்க்கப்படாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று ஜாகீரின் வழக்குரைஞர்கள் வாதமிட்டனர். எனினும், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து
  நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai