சுடச்சுட

  

  இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது குறித்து கருத்துக் கூற ஐ.நா. மறுத்துவிட்டது.
  குல்பூஷண் ஜாதவ் (46) பாகிஸ்தானில் உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும், சதிச் செயல்களுக்கு திட்டமிட்டதாகவும் கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது.
  இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐ.நா. தலைமைச் செயலாளர் ஆன்டனியோ குட்டேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜாரிக்கிடம் புதன்கிழமை கருத்துக் கேட்டபோது அவர் கூறியதாவது:
  இந்த விவகாரம் குறித்து மதிப்பிடும் நிலையில் ஐ.நா. தற்போது இல்லை. மேலும், இதுகுறித்து எத்தகைய நிலைப்பாட்டையும் நாங்கள் இன்னமும் மேற்கொள்ளவில்லை.
  இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.
  தற்போதைய சூழ்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai