சுடச்சுட

  

  ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  By DIN  |   Published on : 14th April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranabmukherjee

  சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு தொடர்பான 4 துணை மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
  இதன் மூலம், நாடு முழுவதிலும், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரே சீரான வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
  ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதற்காக, தேசிய சரக்கு-சேவை வரி மசோதா (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா (சிஎஸ்-ஜிஎஸ்டி) ஆகிய 4 துணை மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
  இந்த 4 துணை மசோதாக்களும், மக்களவையில் கடந்த மார்ச் 29-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஏப்ரல் 6-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டன.
  இந்நிலையில், இந்த 4 துணை மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
  இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இதுவாகும்.
  இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் விவாதித்து இறுதிசெய்யும்.
  மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் பேசியபோது, மனை வணிகத்தை (ரியல் எஸ்டேட்) ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறினார்.
  மேலும், எதிர்காலத்தில் பெட்ரோலியப் பொருள்கள், மதுபானங்கள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai