சுடச்சுட

  

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.30 கோடி வசூலானது.
  திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
  67,600 பக்தர்கள் தரிசனம்
  ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 67,600 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 27,853 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 2 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் ஒரு காத்திருப்பு அறையிலும் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரிசன பக்தர்கள் மற்றும் நடைபாதை பக்தர்களுக்கு தலா 2 மணி நேரம் ஆனது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai