சுடச்சுட

  
  roja

  திருப்பதி ஏழுமலையானை நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா வியாழக்கிழமை வழிபட்டார்.
  திருப்பதி ஏழுமலையானை வழிபட நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.
  அங்கு தங்கிய அவர் வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தார்.
  தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.
  இதையடுத்து கோயிலை விட்டு வெளியில் வந்த ரோஜா கூறியதாவது:
  ஆந்திர மாநிலத்தில் வறட்சி நீடித்து வருகிறது. மக்களின் குடிநீர் தேவையைப் போக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தேர்தலின் போது அளித்த விவசாயக் கடன் தள்ளுபடி, அனைவருக்கும் இலவச வீடு, இலவச இணைய இணைப்பு, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை. அதற்கு பதில் ஹைதராபாதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றைக் கட்டி, அதன் கிரகபிரவேச விழாவை ரகசியமாக நடத்தி முடித்துள்ளார். தெலுங்கு மொழியை சரிவர படிக்கத் தெரியாத அவரது மகன் தற்போது ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
  ஆந்திர முதல்வர் மக்களின் வரிப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடாமல் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே செலவிட்டு வருகிறார்.
  ஆந்திர மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்றால், ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்றார் ரோஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai