சுடச்சுட

  

  நல்ல வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாவிட்டால் வாக்குச்சீட்டு முறை

  By DIN  |   Published on : 14th April 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election

  உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள நகராட்சித் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு நல்ல முறையில் இயங்கக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அளிக்க முடியாவிட்டால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

  இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் ஆணையர் எஸ்.கே.அகர்வால், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நான் அண்மையில் சந்தித்துப் பேசினேன்.
  அப்போது, நகராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நல்ல முறையில் இயங்கக் கூடிய புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். இல்லாவிட்டால், வாக்குச்சீட்டு முறையில் நகராட்சித் தேர்தலை நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.
  கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சித் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் அளித்திருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2006-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை ஆகும். எங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவை இல்லை.
  மாநிலத்தில் நகராட்சித் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை இரண்டாவது வாரத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது. தற்போது வார்டுகளை மறுவரையறை செய்யும் பணியை மாநிலத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai