சுடச்சுட

  
  Narayan

  பாஜக-வில் தாம் இணையப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான நாராயண் ராணே மறுப்பு தெரிவித்துள்ளார்.
  கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர் நாராயண் ராணே. சிவசேனை கட்சியை சேர்ந்த இவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  தொடர்ந்து, காங்கிரûஸ சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவாண் ஆகியோரின் அமைச்சரவையில் நாராயண் ராணே அமைச்சர் பொறுப்பு வகித்தார்.
  இந்நிலையில், இவர் பாஜக-வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின.
  குறிப்பாக, மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீûஸ ராணே சந்தித்ததாகவும், அவர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் குஜராத் மாநிலம், ஆமதாபாதிலுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் இல்லத்துக்கு புதன்கிழமை இரவு சென்றதாகவும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகின.
  இதை, ராணே மறுத்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  சொந்த வேலை காரணமாக, புதன்கிழமை நான் ஆமதாபாதில் இருந்தது உண்மை. எனினும், ஃபட்னவீஸýடன் சேர்ந்து நான் அமித் ஷாவை சந்தித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை.
  மேலும், பாஜக-வில் நான் இணையப் போவதாக வெளியான செய்தியும் தவறானதாகும். காங்கிரஸிலிருந்து விலகும் திட்டமில்லை. அண்மையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன். அப்போது, எனது குறைகளை அவர் கேட்டறிந்தார். எனினும், அவை தீர்க்கப்படவில்லை என்றார் நாராயண் ராணே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai