சுடச்சுட

  

  ராணுவ வீரர்களை தாக்கிய இளைஞர்கள்: பரவி வரும் விடியோ காட்சி

  By DIN  |   Published on : 14th April 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இளைஞர்கள் சிலரால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட விடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது.
  ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். அதை சிலர் செல்லிடப்பேசிகளில் விடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த விடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது.
  இதுகுறித்து சிஆர்பிஎஃப் ஐஜி ரவிதீப் சஹி, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அந்த விடியோ காட்சியை ஆய்வுக்கு உள்படுத்தியதில் வீரர்கள் இளைஞர்களால் தாக்கப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட இடம் எது என்று கண்டறிந்துவிட்டோம்.
  அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு இதுதொடர்பாக தகவல் அளித்துவிட்டோம். இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வோம். வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ரவிதீப் சஹி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai