சுடச்சுட

  

  வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை: "தேர்தல் ஆணையம் உறுதிபட தெளிவுபடுத்துவது அவசியம்'

  By DIN  |   Published on : 14th April 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SYQuraishi

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் உறுதியாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வலியுறுத்தியுள்ளார்.
  மத்தியப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரச் சோதனையின்போது பாஜகவுக்கு மட்டும் வாக்குகள் பதிவானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு விளக்கங்களை அளித்த நிலையில், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அரசைக் குறைகூறி வருகின்றன.
  இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலும் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. ஆனால், இந்த சவாலைக் கூட அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
  இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தொழிற்சாலைகளில் அந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட பிறகு அவை எந்த வாக்குச் சாவடியில் வைக்கப்பட உள்ளன? என்பது எவருக்கும் தெரியாது. கணினியின் உதவியோடு ரேண்டம் (திட்டமிடாத தேர்வு) முறையில் அவை எங்கு வைக்கப்பட உள்ளன என்பது தீர்மானிக்கப்படும். ஆனால், இதன் பயன்பாடு குறித்தும், செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்புவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
  வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை எழுந்தால், அதுகுறித்து விளக்கமளிக்காமல் அமைதியாக இருந்து விடுவதும், ஊடகங்களுக்கு பதிலளிக்க தயங்குவதும் தீர்வாகாது.
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்பதை அறுதியிட்டும், திட்டவட்டமாகவும் தெரிவிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai