சுடச்சுட

  

  'வெள்ளை வெளிச்சம்' வள்ளலார் குறித்துப் பேசுகிறார் வைரமுத்து

  By DIN  |   Published on : 14th April 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vallavalar-vairamuthu

  அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து "வெள்ளை வெளிச்சம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கோவையில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உரையாற்ற உள்ளார்.
  தமிழ் இலக்கிய முன்னோடிகள் என்ற தலைப்பில் பாரதி, கம்பர், வள்ளுவர் உள்ளிட்டோர் குறித்து ஏற்கெனவே கவிஞர் வைரமுத்து உரையாற்றியுள்ளார். தினமணியின் தலையங்கப் பக்கத்தில் அவரின் உரைகள் அவர் உரையாற்றியதற்கு மறுநாள் வெளியிடப்பட்டு வருகிறது.
  அந்த வகையில், "வெள்ளை வெளிச்சம்' என்ற தலைப்பில் அருட்பிரகாச வள்ளலார் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை, வரும் 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) தினமணியில் வெளியாக உள்ளது.
  முன்னதாக, கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ- அரங்கில் தினமணி சார்பில் ஏப்ரல் 19-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வள்ளலார் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார்.
  இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட இலக்கிய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக அன்பர்கள், தினமணி வாசகர்கள், கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்ளுமாறு தினமணி நாளிதழ் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. அனுமதி இலவசம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai