சுடச்சுட

  

  ஸ்ரீநகர் இடைத் தேர்தல்: வெறும் 2 சதவீதம் வாக்குப் பதிவு

  By DIN  |   Published on : 14th April 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப் பதிவில், வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
  அதன் வாக்குப்பதிவின்போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
  மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 7.14 சதவீதம் வாக்குகளே பதிவாகின.
  இந்தச் சூழலில், தேர்தல் வன்முறை காரணமாக ஸ்ரீநகரில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, வியாழக்கிழமை மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
  சோய்பாக் என்னும் பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி அருகே நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தைத் தவிர, வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.
  எனினும், இந்த வாக்குப் பதிவில் வெறும் 2 சதவீத வாக்குகளே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
  ஸ்ரீநகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை (ஏப். 15) வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai