சுடச்சுட

  

  ஹிமாசல் முதல்வருக்கு மீண்டும் சம்மன்: அமலாக்கத் துறை நடவடிக்கை

  By DIN  |   Published on : 14th April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
  வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாக வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சில சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் வீரபத்ர சிங் உள்பட 9 பேர் மீது சிபிஐ அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  இதனிடையே, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதற்கான விசாரணைக்கு வியாழக்கிழமை (ஏப்.13) நேரில் ஆஜராகுமாறு வீரபத்ர சிங்குக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. வேறு சில காரணங்களால் தன்னால் நேரில் வர இயலவில்லை என்று வீரபத்ர சிங் தரப்பில் அமலாக்கத் துறையிடம் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய அழைப்பாணையை அமலாக்கத் துறையினர் அவருக்கு அனுப்பியுள்ளனர். வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai