சுடச்சுட

  
  cbse

  விதிமுறைகள்படி முக்கியமான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத நாடு முழுவதும் உள்ள 2000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைப் பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  விதிமுறைகளின்படி பள்ளிகளில் உள்ள குடிநீர் குழாய்கள், வை-ஃபை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை தங்களுடைய தனிப்பட்ட இணையதளத்திலும், சிபிஎஸ்இ இணையதளத்திலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
  அந்த உத்தரவை நாடு முழுவதும் சிபிஎஸ்இ கல்வி அளித்துவரும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றவில்லை. அந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவே அந்தப் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இனிமேலும் அத்தகைய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
  அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai