சுடச்சுட

    

    அமெரிக்காவின் பாணியில் தாக்குதல்: மத்திய அரசுக்கு விஹெச்பி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th April 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது மிகப் பெரிய குண்டை வீசி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு, ஜம்மு-காஷ்மீரிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் பயங்கரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு அதிரடி தாக்குதலை நடத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு (விஹெச்பி) வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது.
    தேசிய அளவில் சட்டம்: பசுவதையை தடுப்பதற்கு, தேசிய அளவிலான சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அப்போதுதான், பசுவதை தொடர்பாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க முடியும்.
    ராமர் கோயில் கட்டுவது உறுதி: ராமர் பிறந்த இடமான அயோத்தியில், அவருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்படுவது உறுதி. மக்கள், நாடாளுமன்றம், பிரதமர் ஆகிய மூன்று தரப்பின் ஆதரவுடன் அக்கோயில் கட்டப்படும் என்றார் அவர்.
    "உறவை துண்டிக்க வேண்டும்': பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தொகாடியாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது.
    அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க வேண்டும். மேலும், இந்தியாவுக்கு சாதகமான நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்தையும் திரும்பப் பெற வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai