சுடச்சுட

  

  இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு வெற்றி அல்ல: சிதம்பரம்

  By DIN  |   Published on : 15th April 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pchidambaram

  அண்மையில் நடைபெற்று முடிந்த 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கும் பாஜகவுக்கு அது உண்மையான வெற்றி அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  தில்லி, ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள், வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
  இதில், தில்லியின் ரஜௌரி கார்டன், மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர், ஹிமாசலப் பிரதேசத்தின் போரஞ்ச், அஸ்ஸாமின் தேமாஜி, ராஜஸ்தானின் தோல்பூர் ஆகிய 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
  இதனிடையே, இடைத்தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் நாளிதழ்களில் விளம்பரங்களைக் கொடுத்திருந்தனர்.
  இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தனது சுட்டுரைப் பக்கத்தில் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை கருத்துப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
  10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 இடங்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அட்டேர் தொகுதியில் காங்கிரஸிடம் அக்கட்சி தோற்றுள்ளது. உண்மையில், அட்டேர் தொகுதியில் பாஜக தோற்றதுதான் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக இருந்திருக்க வேண்டும். பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்றுளதைப் போல, பாஜக அல்லாத கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. பின்னர், இது எவ்வாறு பாஜகவின் வெற்றியாக இருக்கும்? என சிதம்பரம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai