சுடச்சுட

  
  mayavathi

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டை எழுப்பியதால் தமக்கு எதிராக பாஜக சதிச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
  உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்று அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை நான் எழுப்பியதால் எனக்கு எதிரான சதிச்செயல்களில் பாஜக தற்போது ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, எனக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை உத்தரப் பிரதேச அரசு சுமத்தியுள்ளது.
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக, பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கைகோப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார் மாயாவதி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai