சுடச்சுட

  

  ஒற்றுமையாக வாழ விரும்பும் இந்தியர்களுக்கு அம்பேத்கர் வழிகாட்டி

  By DIN  |   Published on : 15th April 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  soniagandhi

  ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்தும் வாழ விரும்பும் இந்தியர்கள் அனைவருக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
  சட்டமேதை பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் முக்கியமானவர் அம்பேத்கர். இந்தியர்கள் அனைவரும் அவர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்தின் அடியொற்றி வாழ்ந்து வருகிறோம்.
  ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடன் வாழ விரும்பும் இந்தியர்கள் அனைவருக்கும் அவரது வாழ்க்கை சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கவும், ஜனநாயகத்தை வலுவாக்கச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றிய அவரது பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறேன் என்று அறிக்கையில் சோனியா காந்தி கூறியுள்ளார்.
  "அம்பேத்கரின் வாழ்க்கையும், அவரது பணிகளும் இந்தியாவின் மனசாட்சிக்காக நடந்த போராட்டமாக அமைந்தது' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai