சுடச்சுட

  

  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரீஷ் சந்திர சக்சேனா (90) தில்லியில் வெள்ளிக்கிழமை காலமானார். வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
  உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்த சக்சேனா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார். இந்திய உளவு அமைப்பான "ரா'-வின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்துள்ளார். பதற்றம் நிறைந்த மாநிலமான ஜம்மு - காஷ்மீரின் ஆளுநராக அவர் இரு முறை பொறுப்பு வகித்துள்ளார்.
  அவரது பதவிக் காலத்தில் அந்த மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்திருந்ததாகக் கூறப்படுவது உண்டு. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  சக்சேனாவின் இறுதிச் சடங்கில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai