சுடச்சுட

    

    பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் தெலங்கானா மாநிலம் விகராபாதில் உள்ள சந்தோஷி மாதா கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினார்.
    அவரது இந்த வருகை குறித்து முன்கூட்டியே முறைப்படியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் மாநில காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹைதராபாதில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரது அழைப்பின்பேரில் யசோதாபென் வந்துள்ளார். அவரது சகோதரர் உள்பட 3 பேர் உடன் வந்திருந்தனர். வியாழக்கிழமை இரவு விகாராபாத் வந்த அவர்கள் வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அப்போது உள்ளூர் பாஜக பிரமுகர்கள் சிலரும் அவர்களுடன் இருந்தனர். வழிபாடு முடிந்த பிறகு மாலையில் யசோதாபென் உள்ளிட்டோர் குஜராத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai