சுடச்சுட

  

  பிரபலங்களின் பிறந்த தினங்களில் விடுமுறை தேவையில்லை: யோகி ஆதித்யநாத்

  By DIN  |   Published on : 15th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YogiAdityanath

  பிரபல தலைவர்களின் பிறந்த தினங்களில் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  அரசியல்சாசன மேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
  பிரபல தலைவர்களின் பிறந்த தினங்களில் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படக் கூடாது. மாறாக, அந்த தலைவர்களின் வாழ்க்கை குறித்தும், அவர்கள் ஆற்றிய அரும் பணிகள் குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  தலைவர்களின் பிறந்த தினங்களையொட்டி அளிக்கப்படும் விடுமுறைகள் அதிகரிக்கப்படுவதால், மாணவர்கள் கல்வி கற்கும் காலம் சுருங்குகிறது.
  இதுபோன்ற விடுமுறைகளால், மாணவர்கள் கல்வி கற்கும் காலம் 220 நாள்கள் என்பதில் இருந்து 120 நாள்களாக குறைந்துள்ளது.
  அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற மத்திய அரசின் நடவடிக்கை, சட்ட மேதை அம்பேத்கரின் பொருளாதார சிந்தனையை அடியொற்றியதாகும். ஒரு ஜனநாயக நாடு, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கருப்புப் பணத்தை தடுக்கவும் விரும்பினால், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை சீரான இடைவெளிகளில் மாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகள்தான், மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையின் அடித்தளமாகும் என்றார் யோகி ஆதித்யநாத்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai