சுடச்சுட

  

  தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழ் மொழியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
  இதேபோல், கேரளம், ஒடிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பிரதமர் மோடி அடுத்தடுத்த சுட்டுரைப் பதிவுகளில் தெரிவித்தார்.
  புனித வெள்ளி வாழ்த்து: இதேபோல், புனித வெள்ளியையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நன்னாளில் ஏசு கிறிஸ்துவின் தியாகத்தையும், சேவைகளையும் நாம் நினைவுகூர வேண்டும்; மக்களின் துயரங்களைப் போக்குவதற்காகவே அர்ப்பணிக்கப்ட்டது அவரது வாழ்க்கை' என்று பதிவு செய்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai