சுடச்சுட

  

  பெயரளவில் உள்ள கட்சிகளை அரசியல் அமைப்பில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  தேர்தலில் போட்டியிடாத 255 அரசியல் கட்சிகளின் நிதி நிலைமை குறித்து விசாரிக்குமாறு வருமான வரித் துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
  இந்த நிலையில், பெயரளவிலான கட்சிகளுக்கு எதிராக, நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  கடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளைக் கண்டறிந்து, 255 கட்சிகளைத் தேர்தல் ஆணையம் விலக்கி வைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கட்சிகள், நன்கொடைகளைப் பெறுவதாகக் கூறி, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகப் பெயரளவில் செயல்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
  தற்போதைய தேர்தல் சட்ட விதிகளின் படி, எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் எளிதாகப் பதிவு செய்துவிட முடியும். அதே நேரத்தில், அந்தக் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய இயலாது.
  அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை, மத்திய சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. அதனால்தான், தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தின்படி, பெயரளவிலான அரசியல் கட்சிகளை விலக்கி வைக்கிறது.
  இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்ய வேண்டியதற்கான விதிமுறைகள் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்கிறது. அவ்வாறு செய்தால், பெயரளவிலான அரசியல் கட்சிகளால் தேர்தல் ஆணையத்தில் எளிதில் பதிவு செய்ய முடியாது.
  ஒருவேளை, அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டால், அதை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  இந்தப் பரிந்துரைகள் யாவும், நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்ட அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்
  டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai