சுடச்சுட

  

  போபால்: மத்தியப் பிரதேசத்தில் போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000, ரூ.100 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  போபாலில் 75 போலி ரூபாய் நோட்டுகளுடன் ஃபயீம் குரேஷி (28) என்பவர் வியாழக்கிழமை மாலையில் பிடிபட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் கும்பல் குறித்த விவரங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, டேனிஷ் அலி (29), வாசிம் ஷேக் (30), ஜிதேந்திர ரெய்க்வார் (28) ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
  கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த டேனிஷ், கடன் தொல்லையால் குறுக்குவழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai