சுடச்சுட

  

  மின்னணுப் பணப் பரிவர்த்தனை: பொறியியல் மாணவிக்கு ரூ.1 கோடி பரிசு

  By DIN  |   Published on : 15th April 2017 11:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  நாகபுரி: மின்னணுப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் 2-ஆம் ஆண்டு மாணவிக்கு ரூ.1 கோடி சிறப்புப் பரிசை பிரதமர் மோடி வழங்கினார்.

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மின்னணுப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்களில் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரதமர் மோடி ‘லக்கி கிரஹக் யோஜ்னா’ என்ற பரிசுத் திட்டத்தை அறிவித்து இருந்தார்.

  இதேபோன்று வர்த்தக நிறுவனங்களுக்கு ‘டிஜிதன் வியாபார் யோஜ்னா’ என்னும் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாடிக்கையாளர் பிரிவில் ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நாகபுரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

  அதில், ஷ்ரத்தா மேங்சேட் என்ற மாணவிக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்பட்டது. அவர் ரொக்கமில்லாமல் ரூ-பே அட்டை வாயிலாக ரூ.1,590 செலுத்தி செல்லிடப்பேசி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  பரிசு கிடைத்திருப்பது குறித்து ஷ்ரத்தா மேங்சேட் செய்தியாளர்களிடம் கூறுகையில், மளிகைக் கடை வியாபாரியின் மகளான நான்,  ‘‘எனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் எனது படிப்பை முடிக்கவேண்டும். அதில்தான் எனது முழு கவனமும் இருக்கும்’’ என்றார்.

  2-வது பரிசான ரூ.50 லட்சம் குஜராத் மாநிலம் காம்பாய் என்னும் இடத்தைச் சேர்ந்த தொடக்க பள்ளிக்கூட ஆசிரியர் ஹர்திக் குமாரும், மூன்றாம் பரிசான ரூ.25 லட்சம் உத்தரகாண்ட் மாநிலம் ஷெர்பூர் கிராமத்தை சேர்ந்த பாரத் சிங் என்பவருக்கு வழங்கப்பட்டது.

  ‘ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்’க்கு ரூ.50 லட்சம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு பின்னர் நாடுமுழுவதும் ரொக்க மில்லா பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரிகளுக்கு டிஜிதன் வியாபார் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து டிஜிதன் வியார் யோஜதா திட்டன் படி முதல் பரிசான ரூ.50 லட்சம் தமிழகத்தின் தலைநகர் சென்னை தாம்பரத்தில் உள்ள ‘ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்’ அதிபர் ஆனந்த் அனந்தபத்மநாபனுக்கு வழங்கப்பட்டது. ரூ.300க்கான மின்னணு பணப் பரிமாற்றத்தை ஏற்றுக் கொண்டதற்காக குலுக்கலில் அவர் இடம்பெற்றிருந்தார்.

  அப்போது, ஆனந்த் அனந்தபத்மநாபன் தனக்கு கிடைத்த பரிசை உடனடியாக தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். இதை பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

  2-ஆவது பரிசு பியூட்டி பார்லர் பெண்: டிஜிதன் வியாபார் யோஜனா திட்டத்தின் 2-ஆவது பரிசான ரூ.25 லட்சத்தை மராட்டிய மாநிலம் தானே நகரில் சிறிய அளவில் பியூட்டி பார்லர் நடத்தி வரும், ராகினி ராஜேந்திர உத்தேகாருக்கும், 3ஆவது பரிசான ரூ.12 லட்சத்தை தெலுங்கானா மாநிலம், அமீர்பேட்டையில் துணிக்கடை நடத்தி வரும் ஷேக் ரபிக்கிற்கு(33) வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai