சுடச்சுட

  

  ரூ.100 கோடியில் அம்பேத்கர் பூங்கா: அடிக்கல் நாட்டினார் சந்திரபாபு நாயுடு

  By DIN  |   Published on : 15th April 2017 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CHANDRABABU3

  ஆந்திரப் பிரதேச மாநிலம், அமராவதியில் ரூ.100 கோடி செலவில் சட்டமேதை அம்பேத்கரின் பெயரில் நினைவுப் பூங்கா அமைப்பதற்காக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழு தலைவரான அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி (ஏப்.14), அவரது நினைவாக பூங்கா அமைக்கும்
  பணிகள் தொடங்கப்பட்டன.
  அமராவதியின் ஐனவோலு என்ற கிராமத்தில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்தப் பூங்காவை அமைக்க ரூ.100 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது.
  பூங்காவில் 126 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலைக்காக மட்டும் அந்த ரூ.100 கோடியில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  பூங்காவில் 3 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் இருக்கைகள் கொண்ட அரங்கம், அம்பேத்கர் நினைவு நூலகம், 2,000 பேர் அமர்ந்து காணக் கூடிய திறந்தவெளி திரையரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பூங்காவை 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai